ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,
தஞ்சாவூர் -இன்றைய சேவை -8.1.22- சனிக்கிழமை, பிற்பகல்.
நமது மடம் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள கிராமங்களில் நடத்தும் ஏழைக் குழந்தைகளுக்கான இலவச டியூஷன் சென்டர் மூன்றையும் இன்று நேரில் சென்று பார்த்தோம்.
டியூஷன் சென்டர் பொறுப்பாளர் திரு சரவணன் நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தார். குழந்தைகளுக்கு மிகத் தேவையான படிப்போடு பக்தியும் குடும்பப் பாசமும் நாட்டுப்பற்றும் வழங்கும் வகையில் இந்த டியூஷன் மையங்கள் செயல்பட ஆரம்பித்து இருக்கின்றன.
பயிற்சி பெற்ற ஆசிரியைகள் இலக்கியா, சுகந்தி மற்றும் ரத்ன பிரியா ஆகியோர் மாணவ மாணவிகளின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இருப்பதில் மகிழ்ச்சி.