இன்றைய சேவை 9.2. 23- வியாழக்கிழமை. ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,
தஞ்சாவூர்.
சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்திற்கு விஜயம் செய்த தினங்களை (பிப்ரவரி 3, 4, 5) முன்னிட்டு அரசினர் ஆடவர் கல்லூரியின் இந்திய பண்பாட்டு மற்றும் சுற்றுலாத்துறை மாணவ மாணவிகள் மத்தியில் 'இளைஞர்களும் சுவாமி விவேகானந்தரும்' என்ற தலைப்பில் சுவாமி விமூர்த்தானந்தர் சிறப்புரையாற்றினார்.
இந்தக் கல்லூரிக்கு சுவாமி விவேகானந்தர் சென்றிருப்பதாகத் தகவல் உள்ளது. அதனைத் தக்க ஆதாரங்களுடன் பதிவு செய்யுமாறு கல்லூரியின் முதல்வர் மாணவர்களைக் கேட்டுக் கொண்டது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று.