இலவச தையல் பயிற்சி வகுப்புகள்
ஆதரவற்ற மற்றும் ஏழை பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்புகளை இன்று 16.10.21 தஞ்சாவூர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் தொடங்கி வைத்தார். திருவாரூரிலுள்ள தர்ஷினி தையலகத்தில் திருமதி சத்யா ஹரி அவர்களின் பொறுப்பில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூர், ஸ்ரீராமகிருஷ்ண சேவா சங்கத்தின் தலைவரான டாக்டர் கோபாலகிருஷ்ணன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். மூன்று மாத கால இந்த வகுப்புகளுக்கான செலவினை அமெரிக்காவின் திருமதி பாரதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
உதவி செவிலியர் பயிற்சி வகுப்புகள்
பிறகு சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூலமாக நடைபெறும் உதவி செவிலியர் பயிற்சிக்கான மாணவிகளுடன் உற்சாக உரையாடினோம்.