ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் மேற்கொண்டுள்ள வாழ்வாதாரம் இன்றித் தவிக்கும் கிராமிய கலைஞர்களுக்கான கோவிட்- 19 நிவாரண சேவை -12.5.21, செவ்வாய்- நான்காம் தினம்.
98% கிராமியக் கலைஞர்கள் தாழ்த்தப்பட்ட தலித் வகுப்பினர். அவர்களைத் துறவிகளும் மடங்களும் கவனிப்பதில்லை என்ற ஒரு பொய்ப் பிரச்சாரம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் இந்த நிவாரண சேவை மூலம் நீக்கப்பட்டது.
இன்று ஒரு கிராமம் முழுவதும் கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டவர்களுக்கு சர்ச் வாசலிலேயே பொருள்கள் விநியோகிக்கப்பட்டன. நாத்திகப் பாசறை என்று சொல்லப்பட்ட ஓரிடத்தில் அம்மன் பாட்டு பாடி குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குத் தீபாராதனை எடுத்து சேவை நடந்தது.
பாபநாசம், திருவலஞ்சுழி, கும்பகோணம், திருவாரூர் ஆகிய பகுதிகளில் 300 குடும்பங்களுக்கு இன்று நிவாரணம் வழங்கப்பட்டது.